அன்பு

அன்பிற் கென்ன தெரியிம்?பூமி தாய் போல் அளவில்லாமல் கொடுப்பதை தவிர!மழை போல் பொழிவதை தவிர!அருவியாய் கொட்டுவதை தவிர!ஆறாய் கரை புரண்டு ஓடுவதை தவிர!கொடுக்க மட்டுமே தெரிந்தது இந்த அப்பழுக்கில்லா அன்பிற்கு!                                    -வீரா

அது நீ இல்லையே

சுத்தி குடும்பம் இருந்தும் தனிமையில நான் இருக்க...எல்லாமே இங்கிருந்தும் ஏனோ உன்னை தேடுறேன்.. யார் இருந்தாலும் அது உன் போல் இல்லையே....எத்தனை பேர் இருந்தாலும் அது நீ இல்லையே...நான் இருக்கேன்னு எம்புள்ள அசைஞ்சுச் சொல்ல.....அப்ப கூட மனம் உன்னை தேடுதே ராசா...…